GIRIJANANDHA - HUMOUR
நலிவுற்ற மனங்களுக்கு நகைச்சுவை மருத்துவம்!
Thursday, May 29, 2008
'மகிழ்ச்சி" நகைச்சுவை இதழ்.
தமிழ்நாடு, தஞ்சாவூர் நகைச்சுவை மன்றத்தின் சார்பில் திருச்சி திரு. கிரிஜா மணாளன் ஆசிரியர் பொறுப்பேற்று வெளியிடும் இந்த 'மகிழ்ச்சி" நகைச்சுவை இதழ், தோழமை மன்றங்களின் நிகழ்ச்சிகளின்போது அம்மன்ற ரசிகர்களை மகிழ்விக்க சிறப்பிதழாக மலர்கிறது. இங்கு நீங்கள் காணும் சிறப்பிதழ், சென்னை, பெரம்பூர் நகைச்சுவை மன்றத்தின் மார்ச் - 2008 நிகழ்ச்சிக்காக வெளியிடப்பட்டது.
Tuesday, May 27, 2008
போலீஸ் கான்டபிளும், இன்ஸ்பெக்டரும்
(போலீஸ் கான்டபிளும், இன்ஸ்பெக்டரும்)
"கத்தியை கீழே எறியவச்சு, இனிமே அதைத் தொடவே
மாட்டேன்னு அந்த ரௌடிக்கிட்ட சத்தியம் வாங்கிட்டேன் சார்!"
"அதுசரி, உங்க கால்ல என்ன வெட்டுக் காயம்?"
"என் கால்ல வெட்டு விழறமாதிரி அதை வீசி எறிஞ்சுட்டான் சார்!"
-------------------------------------------------------------------------------
(கிளர்க்கும், ஆபீஸ் மேனேஜரும்)
"நம்ம கம்பெனில மாசா மாசம் தண்டச்செலவை நிறுத்தற
ஐடியாவே உங்களுக்கு இல்லையா சார்?"
" அதுக்காக, உங்களை ராஜினாமா பண்ணச்சொல்ல முடியுமா சார்?"
----------------------------------------------------------------------------------------------------------------------
"நேத்துத்தான் யாருக்கோ பாராட்டு கூட்டம் நடத்துனீங்க...
இன்னிக்கு யாருக்கு இந்த 'இரங்கற்கூட்டம்'?"
"அவருக்கேதான் சார்!..........நேத்து எல்லாரும் அவரை ஓவரா
பாராட்டுனதுல, 'அட்டாக்' வந்து இன்னிக்கு செத்துப்போயிட்டாரே!"
----------------------------------------------------------------------------
மங்களம் மைந்தன்" திருச்சி - 13.
தெரிஞ்சுக்கலாமே!
ஒரு சேதி இன்னொரு இடத்துக்குச் சீக்கிரமா, வேகமாப் போய்ச்சேரணும்னா, டெலிபோனை பயன்படுத்தறோம். செல்போனை பயன்படுத்தறோம். இப்போ, அதைவிட வேகமாப் போய்ச் சேருறதுக்கு ஒரு வழி இருக்குன்னு நான் கண்டுபிடிச்சிருக்கேன்! என்னன்னா, ஒரு சேதியை உங்க மனைவிக்கிட்டயோ, இல்லே..... ஏதாவது ஒரு பொண்ணுக்கிட்டயோ ரகசியமா சொல்லி, 'இதை யாருக்கிட்டேயும் சொல்லிடாதேம்மா!'ன்னு சொல்லிட்டு வந்துடுங்க. அவ்வளவுதான்! நீங்க 10 அடி தூரம் போறதுக்குள்ளேயே அந்த சேதி 10 பேருக்கு 'பாஸ்' ஆகி, அடுத்த 10 நிமிஷத்துல 10 ஊர்களுக்கேப் போய்ச்சேர்ந்துடும்! (இது 'லேடி கம்யூனிகேஷன்' சிஸ்டத்துல இருக்கற, 'ரகசியத்தை உடனே வெளியே தள்ளிடணும்'கற ஒரு 'பவர்fபுல்' 'சிஸ்டம்' தானுங்க!)
-- ஆர். ராஜ்குமார், திருவெறும்பூர், தமிழ்நாடு.
Friday, May 23, 2008
நான் ரசித்த நகைச்சுவை குறும்பாக்கள்

உள்ளங்கையில் அரிப்பு
-------------------------------------------------
------------------------------------------------
Saturday, May 17, 2008
Thursday, May 15, 2008
ஒட்டியது?
ஒட்டாமல் நீ
ஒதுங்கி ஒதுங்கிப் பழகியதால்
ஒட்டவில்லை உன் நினைவுகள்கூட
என் நெஞ்சில்.
ஒட்டிக்கொண்டிருக்கிறது இன்னும்,
நீ மென்று என் முதுகில் துப்பிய
சூயிங்கம்!
- மங்களம் மைந்தன், திருவெறும்பூர், தமிழ்நாடு.