எங்களது இதயமார்ந்த நன்றி!



கடந்த 24.08.2008 அன்று 'உலக நகைச்சுவைச் சங்கத்தின் சென்னை மயிலாப்பூர் கிளையில் நிகழ்ந்த 'என்.எஸ்.கே. கலைவாணர் நினைவலைகள்' விழாவில், 'நகைச்சுவை வேந்தர்' தஞ்சை தாமு அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, ரசிகர்களுக்கு நகைச்சுவை விருந்தளித்து அனைவரது பாராட்டுக்களையும் பெற்றார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற நகைச்சுவைப் படைப்பாளர்களான கிரிஜா மணாளன், மங்களம் மைந்தன் (திருவெறும்பூர் ஆர். ராஜ்குமார்) ஆகியோரும் கௌரவிக்கப்பட்டனர். திரு. கிரிஜா மணாளன் அவர்கள் இந்நிகழ்ச்சிக்கென தயாரித்து வெளியிட்ட "நூற்றாண்டு கண்ட கலைவாணர்" என்னும் சிறப்பிதழ் ரசிகர்களுக்கு வழங்கப்பட்டது.
"சென்னை டிராமா ஹவுஸ்" விவேக் ராஜகோபால் மற்றும் கலைஞர்கள் வழங்கிய நகைச்சுவை நாடகம் அரங்கத்தை அதிரவைத்தது.'குங்குமம்' வார இதழின் உதவி ஆசிரியர் திரு. வெ. நீலகண்டன் விழாவுக்கு வருகை தந்து, நிகழ்ச்சி முடியும்வரை ரசித்து, நகைச்சுவையாளர்களைப் பாராட்டிச் சென்றது குறிப்பிடத்தக்கது. பிரபல நகைச்சுவை வேந்தர் "பாக்கியம் ராமசாமி" அவர்கள் விழாவில் பங்கேற்ற நகைச்சுவையாளர்களைப் பாராட்டி வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார்.
நிகழ்ச்சியை சிறந்த முறையில் ஏற்பாடு செய்திருந்த மயிலை நகைச்சுவை சங்கச் செயலாளர் திரு ஹ்யூமர் வி. லட்சுமணன் அவர்களைப் பாராட்டுகிறோம்.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home