Tuesday, May 27, 2008

தெரிஞ்சுக்கலாமே!


ஒரு சேதி இன்னொரு இடத்துக்குச் சீக்கிரமா, வேகமாப் போய்ச்சேரணும்னா, டெலிபோனை பயன்படுத்தறோம். செல்போனை பயன்படுத்தறோம். இப்போ, அதைவிட வேகமாப் போய்ச் சேருறதுக்கு ஒரு வழி இருக்குன்னு நான் கண்டுபிடிச்சிருக்கேன்! என்னன்னா, ஒரு சேதியை உங்க மனைவிக்கிட்டயோ, இல்லே..... ஏதாவது ஒரு பொண்ணுக்கிட்டயோ ரகசியமா சொல்லி, 'இதை யாருக்கிட்டேயும் சொல்லிடாதேம்மா!'ன்னு சொல்லிட்டு வந்துடுங்க. அவ்வளவுதான்! நீங்க 10 அடி தூரம் போறதுக்குள்ளேயே அந்த சேதி 10 பேருக்கு 'பாஸ்' ஆகி, அடுத்த 10 நிமிஷத்துல 10 ஊர்களுக்கேப் போய்ச்சேர்ந்துடும்! (இது 'லேடி கம்யூனிகேஷன்' சிஸ்டத்துல இருக்கற, 'ரகசியத்தை உடனே வெளியே தள்ளிடணும்'கற ஒரு 'பவர்fபுல்' 'சிஸ்டம்' தானுங்க!)

-- ஆர். ராஜ்குமார், திருவெறும்பூர், தமிழ்நாடு.

2 Comments:

At May 28, 2008 at 4:52 AM , Blogger அகரம் அமுதா said...

தோழரிடத்தில் ஒரு வேண்டுகோள்! அருள்கூர்ந்து இனி தமிழில் எழுதும் போது தமிழ் எழுத்துக்களுக்கு இடையே ஆங்கில எழுத்துக்களைப் பயன் படுத்தாதீர்கள். (பார்க்க தங்களின் பவர்fபுல்) இதை இப்படி எழுதலாமே! (பவர்ஃபுல்) சோ அவர்கள் தாம் நடத்தும் துக்ளக் இதழில் காஃபி-யை காfபி என்று எழுதிய காரணத்தால் ஒரு மாபெரும் போராட்டமே மதுரையில் வெடித்தது என்பதை மறக்கவேண்டாம். (பின் சோ அவர்கள் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார் என்பது வேறு செய்தி). தமிழ்ச் சொற்களைத்தான் பயன்படுத்த வேண்டும் என்பதல்ல. ஆனால் தமிழில் எழுதும்போது தமிழ் எழுத்துக்களுக்கு மத்தியில் ஆங்கிலத்தைப் புகுத்தாதீர்கள். தங்களிடம் இருந்து நல்ல பதிலை எதிர்பார்க்கிறேன்.

 
At May 28, 2008 at 9:48 AM , Blogger GIRIJAMANAALAN said...

ம‌ன்னிக்க‌வேண்டும் க‌விஞ‌ரே! இடுகையை முடிக்கும் அவ‌ச‌ர‌த்தில் அப்ப‌டி ஒரு மொழிக்க‌ல‌ப்பு ஏற்ப‌ட்டுவிட்ட‌தேயொழிய‌, ந‌ம் த‌மிழ்த்தாய், க‌ல‌ப்பின எழுத்துக் குழ‌ந்தையைப் பிர‌ச‌விக்க‌வேண்டும் என்ற நோக்க‌த்துட‌ன் அல்ல! சுட்டிக் காட்டிய‌த‌ற்கும், அடிக்க‌டி இவ்வ‌லைத்த‌ள‌த்தை எட்டிப் பார்ப்ப‌த‌ற்கும்.....என‌து ந‌ன்றி!

‍ > கிரிஜா ம‌ணாள‌ன்.

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home