நான் ரசித்த நகைச்சுவை குறும்பாக்கள்

(நான் ஒரு இணையதளத்தில் மிகவும் ரசித்த,
நண்பர் திரு. இமாம் கவுஸ் அவர்களின் குறும்பாக்கள்
இரண்டினை இங்கே உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்
- கிரிஜா மணாளன்)
---------------------------------------------------
உள்ளங்கையில் அரிப்பு
உள்ளங்கையில் அரிப்பு
பணவருமானம்தான்,
மருத்துவருக்கு.
-------------------------------------------------
-------------------------------------------------
தண்ணீரில் கண்டம்
கோயில் குளத்தில்
ஜோதிடரின் பிணம்.
------------------------------------------------
------------------------------------------------
நன்றி - கவிஞர் இமாம் கவுஸ்.
1 Comments:
அட நல்லா இருக்கே! நாங்கூட ஒரு வலைத்தளத்தில இருந்த கட்டுரையைப் படித்துவிட்டு நகைச்சுவையா ஒரு வெண்பா எழுதினேன். நல்லா இருக்கா? பாத்து சொல்லுங்க!
/அதோட சாராம்சம் இதுதான்/./
ரெண்டு மூனுபேர் ஒக்காந்துத் தண்ணியடிச்சிக்கிட்டிருந்தாங்களாம். அப்போ ஒருத்தர் "ஏங்க ஒங்களுக்குக் கல்யாணம் ஆகலே"ன்னுக் கேட்டாராம். இதுக்குக் கல்யாணம் ஆகாதவர் "எங்க அக்காவுக்கு ஆகலே அதனால் எனக்கு ஆகலே"ன்னானாம்.
முதலாமவன் "ஒங்க அக்காக்கு ஏன் ஆகலே" ன்னானாம். அதுக்கு இவன் "எங்க அண்ணனுக்கு ஆகலே அதனால எங்க அக்காக்கு ஆகலே"ன்னானாம்.
முதலாமவன் "ஒங்க அண்ணனுக்கு ஏன் ஆகலே"ன்னானாம். அதுக்கு இவன் எங்களையெல்லாம் வளர்த்துப் பெரியாள் ஆக்கறதுக்குள்ளே எங்கண்ணனுக்கு வயசாயிடுச்சி அதனால் அவரு கல்யாணம் பண்ணிக்கலே. அங்க அண்ணன் கல்யாணம் பண்ணாததால எங்க அக்காவும் பண்ணிக்கலே எங்க அக்காவும் பண்ணிக்காததால நானும் பண்ணிக்கல" ன்னானாம்.
அதுக்கு முதலாமவன் "ஒங்க அம்மாக்கும் அப்பாக்கும் ஆச்சா?" இண்ணானாம். இவன் அவனை உட்டானாம் பாருங்கோ ஓங்கி ஒரு அறை!
எண்ணனுக்கும் எக்காக்கும் என்றனுக்கும் கல்யாணம்
பண்ணலன்னு சொன்னாப் பரிகசிச்சி -முன்னஒங்க
அப்பனுக்கும் ஆத்தாக்கும் ஆச்சான்றே ஓங்கிஒன்னு
போட்டா செவில்பிஞ்சி டும்!
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home