Monday, June 30, 2008

அனைவருக்கும் "உலக நகைச்சுவைதின வாழ்த்துக்கள்!


---------------------------------------------------------
உலக நகைச்சுவை தினம் - ஜூலை 1

நகைச்சுவை ரசிகர்கள் அனைவரூக்கும் எனது நல்வாழ்த்துக்கள்!

- கிரிஜா மணாளன், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு.

Saturday, June 28, 2008

அவளுக்கும் என்னைப் பிடிக்கலே!

அசத்தலான எஸ்.எம்.எஸ்!
SMS அனுப்பும் சில நண்பர்கள் தமது கவிதைகளாலும், சிலர் கவர்ச்சிகரமான வாக்கியங்களாலும், சிலர் பொன்மொழிகளாலும் நம்மையே அசத்திவிடுவதுண்டு. இரு நாட்களுக்குமுன் எனக்கு வந்த ஒரு SMS.
"Avalukkum ennai pidikkavillai......enakkum ennai pidikkavillai..." என்று துவங்கியிருந்த அது ஒரு காதல் கவிதையாக இருக்கும் என நினைத்து நான் மேலே படித்தபோது, என் முகத்தில் அசட்டுக்களையால் எண்ணெய் வழியவைத்துவிட்டார் அந்த நண்பர்! ஆமாம், அவரது முழு வாக்கியங்கள் இதுதான்!
" AVALUKKUM ENNAI PIDIKKAVILLAI... ENAKKUM ENNAI PIDIKKAVILLAI...ADHANAAL.....இருவரும் 'எண்ணெய் இல்லாத' சப்பாத்தி சாப்பிட்டோம்!"
- இதை எனக்கு அனுப்பியிருந்த நண்பர் கவிஞர் ராமலிங்கம், கோவை.
- கிரிஜா மணாளன்.

Friday, June 27, 2008

ha...haa...haasyam: குலுங்கிக் குலுங்கி சிரிக்கணும்

ha...haa...haasyam: குலுங்கிக் குலுங்கி சிரிக்கணும்


நன்றி: ஹாஸ்யரசம் வலைத்தளம்.

Friday, June 20, 2008

கவியரசர் கண்ணதாசன் நகைச்சுவை!

"அழும்போது தனியாக இருந்து அழவேண்டும். சிரிக்கும்போது நண்பர்களோடு இருந்து சிரிக்கவேண்டும். கூட்டத்தோடு அழுதால் "நடிப்பு" என்பார்கள். தனியாக இருந்து சிரித்தால், "சந்தேக"ப்படுவார்கள்!"
("செப்புமொழிகள்" நூலில் கவியரசர் கண்ணதாசன்)
- கிரிஜா மணாளன்.

Tuesday, June 17, 2008

இத்தனை பேரு இங்கே வந்து ரசிச்சிட்டுப் போயிருக்காங்க!

website design guide

கீழே "க்ளிக்" பண்ணினா, "ஹ்யூமர் கார்டன்" போய் சிரிக்கலாம்!

HUMOUR-GARDEN: 'பாலன்ஸ்' பண்ணி சிரிங்க!

Monday, June 16, 2008

முனைவர் மு.இளங்கோவன் - Muelangovan: தமிழ்க்காவல் இணைய இதழ்த் தொடக்கவிழா -படங்கள்

முனைவர் மு.இளங்கோவன் - Muelangovan: தமிழ்க்காவல் இணைய இதழ்த் தொடக்கவிழா -படங்கள்

Sunday, June 15, 2008


டாக்டர்களால் சிரிப்போம்!
=============================
"நெஞ்சு வலியால உங்க துடிச்சிப்போய் அம்மா..அம்மான்னு கத்தினாராமே.
....நீங்க கவனிக்கலையா மேடம்?"
" டிவி சீரியல் பாத்துக்கிட்டு இருந்தப்ப, வாசல்ல ராப்பிச்சை எவனும் கத்தறானோன்னு கண்டுக்காம இருந்துட்டேன் டாக்டர்!"

"என் ஆபரேஷனுக்கு டயமாகுதே சிஸ்டர்.....அதென்ன, பக்கத்து டேபிள்ல ஏன் ஒரு ஆட்டுக்குட்டிய கிடத்தி வச்சிருக்கீங்க?"
" அவசரப்பட்டா எப்படிங்க? டாக்டருக்கு இது முதல் ஆபரேஷன் ஆனதால, முதல்ல
அதை பலி குடுத்துட்டு...............அப்புறம்தான் நீங்க!"

"ஐயோ...இதென்ன, பூமாலையை இங்கே ரெடியா வச்சிருக்கீங்க சிஸ்டர்?"
"பயப்படாதீங்க!...ஆபரேஷன் ச்க்ஸஸ் ஆயிடுச்சுன்னா டாக்டர் எடுத்து தன் கழுத்துல போட்டுப்பார்!"
"பெயிலியர் ஆச்சுன்னா...?"
" உங்க 'பாடி'க்குத்தான் சார்!"

"என்னை சீக்கிரம் காப்பாத்தணும்னு உங்களுக்கு இருக்கற அக்கறை அந்த நர்சுக்கு
இல்லே பாருங்க டாக்டர்!"
"எப்படிச் சொல்றீங்க?"
"பாருங்களேன்.....எனக்கு ஏறிக்கிட்டு இருக்கற ரத்தம் சீக்கிரமா ஏறக்கூடாதுன்னு, 'சொட்டுச் சொட்டா' விழறமாதிரி திருப்பி வச்சுட்டுப் போவுது அந்தப்பொண்ணு!"

"நீங்கதான் என்னை வாழவைக்கிற தெய்வம்னு, உங்க கால்'ல விழுந்து கும்பிட்டுட்டுப் போறாரே....அவர் யார் டாக்டர்?"
"நம்ம ஊரு சுடுகாட்டுல 'வெட்டியான்' வேலை பாக்கற ஆளுங்க!"
-------------------------------------------------------------------------
- மங்களம் மைந்தன், திருச்சிராப்பள்ளி.

Monday, June 2, 2008

'நகைச்சுவைத் தென்றல்' தஞ்சை தாமு வழங்கும் நகைச்சுவை நிகழ்ச்சி!
இடம்: சென்னை அம்பத்தூர் நகைச்சுவை மன்றம் - 08.06.2008 ஞாயிறு மாலை 5 மணி.
அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்!
கிரிஜா மணாளன்
(ஆசிரியர் / 'மகிழ்ச்சி' நகைச்சுவை இதழ்
தஞ்சை மகிழ்வோர் மன்றம்
(HUMOUR CLUB OF THANJAVUR )

Sunday, June 1, 2008

முட்டைக்குள்ளேயிருந்து ஒரு யானைக்குட்டி?
இந்த‌ ப‌ட‌த்தைப் பாருங்க! இது 'ஸைல‌ண்ட் ஜோக்"ல‌ ஒரு வ‌கை. ஒரு சேவ‌ல், பெட்டைக்கோழியோட‌ (அதாவ‌து, த‌ன் ம‌னைவியோட‌) க‌ழுத்தைப் பிடிச்சு ஆத்திர‌மா நெறிக்குது! ஏனாம்? ப‌க்க‌த்துல, கீழே பாருங்க, ஒரு முட்டைக்குள்ளேயிருந்து யானைக்குட்டி ஒண்ணு வெளியே வ‌ருது! (உங்க‌ளுக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்..) இன்னும் புரியாத‌வ‌ங்க‌ளுக்கு விள‌க்க‌ம் சொல்லித்தான் ஆக‌ணும். அதாவ‌து, பெட்டிக்கோழி இட்ட‌ முட்டையில‌ ஒரு யானைக்குட்டின்னா...ம‌னைவியோட‌ க‌ற்புல‌ சேவ‌ல் ச‌ந்தேக‌ப்ப‌டுது!
இந்த‌ ஜோக்கை என‌க்கு அனுப்பிய‌ என் நண்ப‌ர் சென்னை அம்ப‌த்தூர் 'சிரிப்பான‌ந்தா' (அம்ப‌த்தூர் ந‌கைச்சுவை ம‌ன்ற‌ம்) அவ‌ர்க‌ளுக்கு உங்கள் சார்பில் என‌து ந‌ன்றி!
> கிரிஜா ம‌ணாள‌ன்.