Monday, June 29, 2009

ஒரு திருமண விருந்தில்........

இரவு மாப்பிள்ளை அழைப்பு முடிந்து சாப்பாட்டுப் பந்தி. இலை முழுவதும் கலர் கலராய் பதார்த்தங்கள். ஒரு பிரபலமான 'கேட்டரிங்க் காண்ட்ராக்டர்" ரின் கைவண்ணம். யூனிஃபாம் ட்ரஸோடு சுறுசுறுப்பாய் பரிமாறிக்கொண்டிருந்த இளைஞர்கள். (அந்தக் காலம் மாதிரி இல்லை. "டேய் நாராயணா! சாருக்கு ரசம் போடு!" என்று தலைமை பரிசாரகர் கட்டளையை ஏற்று, அந்த வயதான நாராயணர், ஆடி அசைந்து நம் இலைக்கு வரும் நமக்கே வயசாகிவிடும்!)

இலைக்கு போண்டா பறிமாறியபடி வந்த இளைஞன் என் இலையில் வைத்தான். அவன் கையில் பாலிதீன் உறை. (சுகாதாரம்!)
நான் அவனை நிமிர்ந்து பார்க்க, "என்ன சார்?. இன்னும் ரெண்டு வைக்கட்டுமா?" என்றான்.
"அதுக்கில்லேப்பா.....இதைத் தொடறதுக்கே நீ "அருவருப்பு" பட்டுக்கிட்டு கைல "க்ளவுஸ்" போட்டுக்கிட்டு எடுத்து வைக்கிறியே.....நாங்க அருவருப்பு படாம இத சாப்பிட, நாக்குல மாட்டிக்கறதுக்கு 'க்ளவுஸ்" தருவீங்களா?"

பையன் முகம் கலவரப்பகுதியாக காட்சியளிக்க, பக்கத்தில் சப்பாத்தியோடு மல்லுக்கட்டிக்கொண்டிருந்த என் மனைவி, அவனிடம் "நீ போப்பா தம்பி, எப் போதும் இவரு இப்படித்தான்,,,,ரொம்ப வாய்க் கொழுப்பு!"
"வாய மூடிக்கிட்டு சாப்பிட்டோமா, போனோமான்னு இல்லாம எதுக்கு அந்தப் பசங்கக்கிட்ட வம்பு வளக்கறீங்க?" - மனைவி.

"வாய மூடிக்கிட்டு' எப்படி சாப்புடறதுன்னு தெரியலையேடி....."- அக்கம் பக்கத்தார் அறியாத வண்ணம் என் இடுப்பில் ஒரு இடி!


- கிரிஜா மணாளன்

Saturday, January 31, 2009

எங்கள் கண்ணீர் அஞ்சலி!




திரைவானில் நகைச்சுவை ஒளி வீசிக்கொண்டிருந்த "நாகேஷ்" என்னும் மாபெரும் நட்சத்திரம் இன்று மறைந்தது என்னும் செய்திகேட்டு கண்ணீர் வடிக்கிறோம்.
அவரது ஆன்மா அமைதிபெற எங்கள் பிரார்த்தனைகள்.


- கிரிஜா மணாளன்
- தஞ்சை தாமு.

உறுப்பினர்கள்,
தஞ்சை மகிழ்வோர் மன்றம்
(Humour Club Of Thanjavur)
தஞ்சாவூர்.

Tuesday, January 27, 2009

திருச்சி 'கிரிஜா மணாளனின்' 'நகைச்சுவைத் தளம்: "கணினிப் படங்கள்" தரும் நகைச்சுவை!

திருச்சி 'கிரிஜா மணாளனின்' 'நகைச்சுவைத் தளம்: "கணினிப் படங்கள்" தரும் நகைச்சுவை!

(மேலேயுள்ள 'சுட்டி'யை "க்ளிக்" செய்து பார்க்கவும்)

Wednesday, January 21, 2009

ஹா..ஹா..ஹாஸ்யம்: சிரிச்சு நாளாச்சே

ஹா..ஹா..ஹாஸ்யம்: சிரிச்சு நாளாச்சே

(மேலேயுள்ள 'சுட்டி'யை 'க்ளிக்' செய்து படிக்கவும்.)

Sunday, December 14, 2008

எவ்வளவு செலவாகும்பா?


வடிவேலு: அமெரிக்காவுக்கு போலாம்னு நெனைக்கிறேன்......எவ்வளவு செலவாகும்பா?

பார்த்திபன்: ......'நெனைக்கிறதுக்கு' எதுவும் செலவாகாதுடா!

(SMSல் அனுப்பியவர் எஸ். மோகன்ராஜ், திருப்பூர்)

Saturday, September 27, 2008

ஹலோ டாக்டர்!


"ஒரு ஆபரேஷனை ஆரம்பிக்கும்போது உங்க மனநிலைமை எப்படி இருக்கும் டாக்டர்?"

"சீக்கிரம் முடியணுமேன்னுதான்!"

"பேஷண்டோட 'ஆயுளா' டாக்டர்?
---------------------------------------
"உங்க மனைவி அவங்களோட ட்ரீட்மெண்டுக்கு வேற டாக்டர்க்கிட்ட போறாங்க போலிருக்கே டாக்டர்?"

"என்ன பண்றது?.........'நல்ல டாக்டரா' பார்த்துத்தான் போவேன்னு பிடிவாதமா இருக்காளே மேடம்!"
---------------------------------------

- ஆர். ராஜ்குமார் ('மங்களம் மைந்தன்')
திருவெறும்பூர், திருச்சி.

Thursday, September 25, 2008

வாய்விட்டுச் சிரிச்சா......